வயநாட்டில் ராணுவத்தினர் கட்டிய இரும்பு பாலம்
கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மிகவும் வலுவான இரும்பு பாலம் கட்டி ராணுவத்தினர் அசத்தியுள்ளனர்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இது ஒரு பக்கம் இருக்க, பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் வெளியேற முடியாமல் மக்கள் தவித்தனர். இதையடுத்து, தற்காலிக பாலங்கள் அமைக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டது.
இதையடுத்து வயநாட்டில், 17 மணி நேரம், 50 நிமிடங்களில் 110 அடி நீள இரும்பு பாலத்தை அமைத்தது இந்திய ராணுவம்; இதில் 24 டன் எடை வரையிலான வாகனங்களை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது