கையெழுத்திட்டார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷிடம் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அபகரித்த புகார் மற்றும் பிரகாசுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த 2 வழக்குகளிலும் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று மாலை வெளியே வந்தார். இந்நிலையில் கோர்ட் உத்தரவின்படி எம்.ஆர்.விஜயபாஸ்கர் முதல் நாளான இன்று காலை 10.45 மணிக்கு கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர் வாங்கல் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட்டார்.
மாலை சிபிசிஐடி அலுவலகத்தில் மீண்டும் கையெழுத்திட்டார்