தெற்கு காஷ்மீரில் இமயமலையில்
தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். நடப்பாண்டு யாத்திரை கடந்த ஜூன் 29ம் தேதி தொடங்கியது.
வரும் 19ம் தேதி வரை 52 நாள்களுக்கு மட்டுமே யாத்திரை நடைபெறுகிறது. 48 கி.மீ. தூரம் கொண்ட பஹல்காம் வழித்தடம், 14 கி.மீ. தூரம் கொண்ட செங்குத்தான பால்டால் வழித்தடம் என இரு பாதைகளில் யாத்திரை மேற்கொள்ளலாம். நடப்பாண்டில் இதுவரை 4.7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர்