பட்டப் பகலில் சிறுத்தை நடமாட்டம்
உதகை அருகே மாயார் கிராமத்தில் பட்டப் பகலில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மசினகுடி வனப் பகுதியில் இருந்து தண்ணீரை தேடி மாயார் கிராமத்துக்குள் சிறுத்தை வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாயார் அணைப் பகுதியில் சிறுத்தை தண்ணீர் குடிக்க வந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்