ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் செய்தி

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீசார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் பலியான, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். இதுபற்றி வெளியிடப்பட்ட செய்தியில், கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் பலர் பலியான சோக சம்பவத்திற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்கு புதின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், கேரள நிலச்சரிவு சோகத்திற்கான மிக உண்மையான இரங்கல்களை ஏற்று கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு இரக்கம் மற்றும் ஆதரவான வார்த்தைகளை தெரிவிக்கவும் மற்றும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.