நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தின் மற்றொரு கிளை
நடிகர் சூரி மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே சொந்தமாக அம்மன் உணவகம் என்கிற பெயரில் 10க்கும் மேற்பட்ட உணவகங்களை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் புதிதாக மேலும் ஒரு உணவகத்தை இன்று துவக்கி திறந்து வைத்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டினும் சூரிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது