கேரளாவிற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழ்நாடு தயார்: ஸ்டாலின்
“கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு சம்பவத்தில் உயிர்கள் பறிபோன செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்; முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர் அனைவரையும் மீட்கும் என நம்புகிறேன்; இந்த நெருக்கடியான நேரத்தில் நமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு