மத்திய அமைச்சர் நட்டா பதில்
கேரள நிலச்சரிவு விவகாரத்தில் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்:
கேரள நிலச்சரிவு விவகாரத்தில் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். கேரள முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி நிலைமையை கேட்டறிந்திருக்கிறார் என்று குறிப்பிட்ட நட்டா, கேரள மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் தற்போது அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்டு தேவையான சிகிச்சை அளிப்பதே முக்கியம் என்றும் தெரிவித்தார்