முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு 1,355 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரூ.3,776 மதிப்பீட்டில் 8,436 திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு 5,776 திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.2021- 22 நிதியாண்டில் 1250 திருக்கோயில்களுக்கு திருப்பணி நிதி தலா ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு ரூ.25 கோடி வழங்கப்பட்டது.