ராகுல் காந்தி

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேசினேன்; மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உறுதி அளித்துள்ளார்: ராகுல் காந்தி

 கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேசினேன்; மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உறுதி அளித்துள்ளார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முண்டக்கையில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் வெல்லரிமலை பகுதியில் அதிகாலையில் ஏற்பட்டது. கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை ஒரு குழந்தை உட்பட 20 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவந்த நிலையில் அவர்களும் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். மண் மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கி புதையுண்ட மக்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியதாவது,

Leave a Reply

Your email address will not be published.