பெங்களூர் நாகர்கோவில் ரயில் கட்டணம் உயர்வு?

தென்மாவட்ட இரயில் பயணிகளின் வசதிக்காக பெங்களூர் – நாகர்கோவில் விரைவு வண்டியை, சிறப்பு இரயிலாக இயக்க இரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது. பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி தினமும் செல்லும் சிறப்பு இரயில், நாளை முதல் இயங்கவுள்ளது.

பெங்களூர் – நாகர்கோவில் விரைவு வண்டி (வ.எண் 07235) 31 ஆம் தேதி மாலை 5 மணியளவில் பெங்களுருவில் இருந்து புறப்படுகிறது. பெங்களூரில் இருந்து ஓசூர், தருமபுரி வழியாக சேலத்திற்கு இரவு 10.15 மணிக்கு செல்கிறது. இதன் பின்னர் 5 நிமிட இடைவெளிக்கு பின்னர் புறப்படும் இரயில், இரவு 10.44 மணியளவில் இராசிபுரம் இரயில் நிலையத்தை சென்றடையும்.

இதனைத்தொடர்ந்து நாமக்கல்லில் இரவு 11.14 மணிக்கும், கரூரில் 11.53 மணிக்கும் சென்றடைகிறது. பின் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக மறுநாள் காலை 8.20 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.

மறுமார்கமாக நாகர்கோவில் – பெங்களூர் சிறப்பு இரயில் (வ.எண் 07236) 1 ஆம் தேதி இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு, கரூருக்கு அதிகாலை 2.13 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் சேலம், ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு மறுநாள் காலை 9.20 க்கு சென்றடைகிறது.

இந்த இரயில் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ள நிலையில்சேலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு பழைய கட்டணமாக ரூ.245 இருந்த நிலையில், ரூ.385 ஆக இது உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இரண்டாம் வகுப்பு, படுக்கை வசதி, 3 டயர் ஏ.சி, 2 டயர் ஏ.சி டிக்கெட்டுகள் ரூ.140 இல் இருந்து ரூ.500 வரை உயர்ந்துள்ளது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.