சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீங்கள் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
ஆயுர்வேதத்தின் படி, சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீங்கள் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
தொப்பை மற்றும் எடையை குறைக்க நீங்கள் விரும்பினால் இந்த செய்தி உங்களுக்கு நிச்சயம் உதவும். உடல் பருமனை சரியான நேரத்தில் குறைக்கவில்லை என்றால், பிரச்சனை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். தற்போதைய காலக்கட்டத்தில் உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாக மாறிவிட்டது. சிலர் இதற்காக ஜிம்மில் வர்கவுட் செய்கின்றனர், சிலர் நேராக மருத்துவரிடம் ஆலோசனை பெறுகின்றனர். இவைகளை தவிரவும் உடல் எடையை குறைக்க உதவும் சில ஆயுர்வேத குறிப்புகளை உள்ளன. அதை நாம் தினமும் பின்பற்றி வந்தால் 30 நாட்களில் 7 கிலோ வரை உடல் எடை குறைவது மட்டுமில்லாமல் முடி வளர்ச்சி, தோல் பளபளப்பு, உடல் ஆரோக்கியம் போன்றவை ஏற்படும்.
உடலில் ஏற்படும் தொப்பை கொழுப்பை குறைப்பது ஏன் அவசியம்
நன்கு அறியப்பட்ட ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானியின் கூற்றுப்படி, உடல் பருமன் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், அதிகரித்த யூரிக் அமிலம் மற்றும் நீரிழிவு போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே இதனால் தான் உடலில் ஏற்படும் தொப்பை கொழுப்பை குறைப்பது முக்கியமாகும்.
மேலும் படிக்க | சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும்
உடல் எடையை குறைக்க முக்கிய குறிப்புகள்
குறிப்பு 1: நீங்கள் மதிய உணவு உண்ணும் போது, அன்றைய கலோரிகளில் அரை சதவீதத்தை உட்கொள்ளுங்கள். ஏனெனில் மதிய நேரத்தில் செரிமான சக்தி அதிகமாக இருக்கும். இரவு உணவின் போது நீங்கள் குறைந்தபட்ச கலோரிகளை உட்கொள்ள வேண்டும்.
குறிப்பு 2: தொப்பையை குறைக்க, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதை குறைக்க வேண்டும். நீங்கள் சர்க்கரை பானங்கள், இனிப்புகள், பாஸ்தா, மைதா, பிஸ்கட் மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
குறிப்பு 3: உடல் எடையைக் குறைக்க, வெந்தயப் பொடியை எடுத்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சாப்பிடுங்கள். இதன் மூலம் நீங்கள் நிச்சயம் பயனடையலாம். இது தவிர, வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
குறிப்பு 4: எடை இழப்புக்கு திரிபலாவை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது மற்றும் உங்கள் செரிமான அமைப்பை புதுப்பிக்கிறது. திரிபலா பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து, இரவு உணவுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் குடிக்கவும்.
குறிப்பு 5: சுக்குப்பொடியும் எடை குறைப்பதில் நன்மை பயக்கும். சுக்குப்பொடியினில் தெர்மோஜெனிக் முகவர்களைக் கொண்டுள்ளது, இது கொழுப்பை எரிக்க பயனுள்ளதாக இருக்கும். சூடான நீரில் சுக்குப்பொடியை எடுத்துக்கொள்வது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவுகிறது. உங்கள் வீட்டில் சுக்குப்பொடி இல்லை என்றால், நீங்கள் பச்சை இஞ்சியை காய்கறி மற்றும் தேநீருடன் உட்கொள்ளலாம்