“முதலமைச்சரின் கூற்றுக்கு மத்திய நிதி அமைச்சர் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்”
“முதலமைச்சரின் கூற்றுக்கு மத்திய நிதி அமைச்சர் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்”
-ப.சிதம்பரம் கருத்து!
பிப்-2, 2021 அன்று மத்திய அரசின் 2021-22 ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அப்பொழுது அவர் ஆற்றிய உரையில், பத்தி 59ல்.. ‘₹63,246 கோடி செலவில் நிறைவேற்றப்படும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசின் பங்களிப்பு நிதி வழங்கப்படும்’ என கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூடத் தரவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்.
முதலமைச்சரின் கூற்றுக்கு மத்திய அரசு, குறிப்பாக நிதி அமைச்சர் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார் என்று கருதுகிறேன் என்றார்.