கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக செயல்படும்
கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் பணத்தில் இருந்து ஊதியத்தை பெறும் அதிகாரிகள், அச்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.