சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு அபராதம்?
புதிய வாகன சட்ட திருத்தத்தின் படி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
நாளுக்கு நாள் சென்னை போன்ற பெருநகரங்களில் விபத்துகள் அதிகமாகி வருகின்றன. இதில் லைசன்ஸ் இல்லாமல் ஹெல்மெட் அணியாமல் சிறுவர்கள் தாறுமாறாக ஓட்டும் வாகனங்களும் விபத்துக்குள்ளாவது அதிகமாகி வருகிறது. இந்நிலையில் புதிய வாகன சட்டத் திருத்த சட்டப் பிரிவு 199-ன் படி பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்க முடியும். என அறிவிக்கப்பட்டுள்ளது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.
நன்றி டி ஒ நெட்