கோயம்பேடு – கிளாம்பாக்கம் இடையே
கோயம்பேடு – கூடுவாஞ்சேரி, கோயம்பேடு – கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பேருந்துகளின் தடம் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழைய எண்கள்: கோயம்பேடு – கிளாம்பாக்கம் – 104c cut, கோயம்பேடு – கூடுவாஞ்சேரி – 104c
புதிய எண்கள்: கோயம்பேடு – கிளாம்பாக்கம் – 104c, கோயம்பேடு – கூடுவாஞ்சேரி – 104cx
இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது; மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு முதல் கூடுவஞ்சேரிக்கு இயக்கப்படும் பேருந்துகளின் தடம் எண்கள் மாற்றம் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
மாநகர் போக்குவரத்துக் கழகம் பொது மக்களின் நலன் கருதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும், ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒவ்வொரு தடம் எண் வழங்கி பயணிகள் எளிதாக பயணம் செய்ய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104C cut பேருந்து, தடம் எண்.104C என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும். அதேபோல் கோயம்பேடு முதல் கூடுவஞ்சேரி வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104C பேருந்து, தடம் எண்.104CX என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.