மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1220 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 81,200 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பார்த்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், ஜேஎஸ் ஸ்டீல், டாடா ஸ்டீல் பங்குகள் தலா 3%-க்கும் விலை உயர்ந்தும், இன்போசிஸ், எச்.சி.எல். டெக் பங்குகள் தலா 2.9% கோட்டக் வங்கி, சன்பார்மா பங்குகள் தலா 2.0% விலை உயர்ந்தும் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 29 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 402 புள்ளிகள் உயர்ந்து 24,808 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.