பாரீஸ் ஒலிம்பிக் வில் வித்தை போட்டியில்
பாரீஸ் ஒலிம்பிக் வில் வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்படுகிறது. இந்த ஒலிம்பிக் திருவிழா நாளை (26-ந் தேதி) கோலாகலமாக தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகிறது. 3-வது முறையாக பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது.
இந்தப் போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். முதல் முறையில் வீரர்கள், வீராங் கனைகள் சம அளவில் கலந்து கொள்கிறார்கள். 32 விளையாட்டில் 46 பந்தயத்தில் 324 வகை பிரிவில் போட்டி நடைபெறுகிறது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. முன்னதாக நடைபெற்ற வில் வித்தை தகுதி சுற்றில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஒலிம்பிக் வில் வித்தை காலிறுதியில் இந்திய அணி
பாரீஸ் ஒலிம்பிக் வில் வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. வில் வித்தை தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று தனிநபர் பிரிவில் 3 பேர் காலிறுதிக்கு முன்னேறினர். 1983 புள்ளிகளுடன் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. தீபிகா குமாரி, அங்கிதா பகத், பஜன் கவுரை கொண்ட அணி காலிறுதிக்கு முன்னேறியது. பாரிஸ் நகரில் லெஸ் இன்வாலிடெஸ்கார்ட்னில் வில் வித்தை தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன.
காலிறுதியில் தென்கொரியாவை எதிர்கொள்கிறது இந்தியா
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வில் வித்தையில் இந்திய மகளிர் அணி 4-ம் இடம் பிடித்து அபாரம். வில் வித்தை தரவரிசை சுற்று முடிவில் இந்திய மகளிர் அணி 4-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. தகுதிச் சுற்றில் அங்கிதா பகத் 11, பஜன் கவுர் 22, தீபிகா குமார் 23-வது இடத்தை பிடித்தனர். காலிறுதிப் போட்டியில் தென்கொரியா அணியை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் அணி