கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர்
கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். லாரி ஓட்டுனர்கள் சின்னன்னன், முருகன் ஆகியோர் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்