கனமழை எதிரொலி: கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியது
124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியது. கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் 35,694 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து எந்த நேரத்திலும் 50,000 கனஅடி நீர் வரை திறக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.