அரசு தொடக்கப்பள்ளியில் பல்லி கிடந்த உணவை
தர்மபுரி மாவட்டம், தேவரசம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பல்லி கிடந்த உணவை மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர். அந்த பள்ளியில் காலை உணவு சமைத்து வழங்கப்பட்ட பிறகு, அந்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. அதற்குள் 19 மாணவ, மாணவிகள் சாப்பிட்டு விட்டதால், அரசு மருத்துவ குழுவினர் நேரில் வந்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.