மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வரி தான் இல்லை மற்றபடி மத்திய பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டுக்கும் பொருந்தும்
உதாரணமாக இளைஞர்களுக்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பு
படிப்புக்கு ஊதியம் பெண்கள் தங்கும் விடுதி
போன்றவை அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவை
மேலும்
நகரங்கள், கிராமப்புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும்:
20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கும் திட்டம்
உயர்கல்வி பெற ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு அரசு
வேளாண்மைத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு
விவசாயத் துறைகளில் டிஜிட்டல் புரட்சி செய்ய அனைத்து கட்டமைப்புகளும் தயாராக உள்ளது. 32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம். வேளாண்மைத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு.
கல்வித்திறன் மேம்பாட்டிற்கு ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு
நாட்டின் பணவீக்கம் குறைவாகவே உள்ளது. வேலைவாய்ப்பு, கல்வித்திறன் மேம்பாட்டிற்கு ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு. 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.
முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் உச்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்வு.
தொழில் பயிற்சி பெறும் 1 கோடி இளைஞர்களுக்கு பழகுநர் ஊக்கத்தொகை மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும்.
பட்ஜெட்டில் ஊரக மேம்பாட்டுத்துறைக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
கூடுதலாக சிறிய வகை அணுமின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
மாநில அரசுகளோடு இணைந்து பல்வேறு நகரங்களை வளர்ச்சி மையமாக அரசு மேம்படுத்தும்.
மாநில அரசு வங்கிகளோடு இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம்
புதிதாக பணிகளில் சேரும் இளைஞர்களுக்கு அரசு தரப்பில் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும்:
விவசாயத்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு
“பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய இலவச வீடுகள் கட்டப்படும்”
புற்றுநோயாளிகள் நிவாரணம் பெரும் வகையில் மூன்று வகையான மருந்து மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றுக்கு சுங்க வரியில் இருந்து முழு விளக்கு அளிக்கப்படுகிறது
மொபைல் போன்கள் மற்றும் அது தொடர்பான இதர சாதனங்கள் மீதான சுங்கவரி 15 சதவீதம் குறைக்கப்படுகிறது
இணைய வர்த்தகத்திற்கான TDS குறைப்பு
இணைய வர்த்தகத்திற்கான TDS குறைக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி வரிவிதிப்பை எளிமைப்படுத்த நடடிவக்கை
செல்போன் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரி 15% ஆக குறைக்கப்படும்
செல்ஃபோன் உதிரிபாகங்களின் விலை குறைக்கப்படும் அறிவிப்பால், நாட்டில் செல்ஃபோன் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் மீதான சுங்க வரி 6% ஆக குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெள்ளி மீதான சுங்க வரியும் 6.5%ஆக குறைக்கப்படும்.
வருமான வரி கணக்கை குறிப்பிட்ட நாள்களுக்குள் தாக்கல் செய்யவில்லையெனில், அது குற்றமாக கருதப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், வருமான வரி கணக்கை குறிப்பிட்ட நாளுக்குள் தாக்கல் செய்யவில்லையெனில் இனி குற்றமாகாது என்று கூறினார்.
இதேபோல், 1961ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தை 6 மாதங்களுக்குள் சீராய்வு செய்யப்படும்
ஏஞ்சல் வரி விதிப்பு முறை ரத்து
ஸ்டார்ட் ஆப் நிறுவனம், அதன் சந்தை மதிப்பை விட அதிக முதலீடுகளை பெற்றால் ஏஞ்சல் வரி விதிக்கப்படும்.
அதாவது, முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி கோரும் நிறுவனங்கள் ஏஞ்சல் வரி செலுத்த வேண்டும் என்பது நடைமுறை. தற்போது, முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி விதிப்பு முறை முழுமையாக அகற்றப்படுகிறது
கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரி குறைப்பு
வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மீதான கார்ப்பரேட் வரி, பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது.
40%ஆக உள்ள கார்ப்பரேட் நிறுவன வரி 35%ஆக குறைக்கப்படும்.
தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான நிலையான வரி கழிவு ₹50,000 இருந்து ₹75,000 ஆக உயர்வு
புதிய வருமான வரி முறையில் ₹3 லட்சம் வரையில் வரி இல்லை,
₹3 லட்சத்தில் இருந்து ₹7 லட்சம் 5% வரி,
₹7 லட்சத்தில் இருந்து ₹10 லட்சம் வரை 10%,
₹10 லட்சம் முதல் ₹12 லட்சம் வரை 15%,
₹12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20%,
₹15 லட்சத்திற்கு மேல் 30% வரி
போன்ற அறிவிப்புகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவை.
இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்தால் தமிழ்நாட்டிலும் அமலில் தான் இருக்கும்