உலகப் பாவை – தொடர் – 28

திருக்குறள்: உலகப் பாவை

28. வேற்றுமைக்குள் ஒற்றுமை

வேற்றுமையே அற்ற வாழ்க்கை வேண்டுவது குறிக்கோள் நோக்கு;

வேற்றுமைக்குள் ஒற்று மைதான் உடனடியாய் வேண்டும் வாக்கு;

ஊற்றெடுக்கும் கருத்தும் போக்கும்

உருவாகும் சூழற் கேற்ப வேற்றுமையும் கொண்டு தோன்றல்

வெளிப்படையே; இருந்த போதும்

போற்றுநெறி எதுவா னாலும் பொதுநெறியைத் தேர்ந்து,

சற்றே

வேற்றுமையை மறந்து வாழின் உருவாகும் ஒருமைப் பாடு;

வேற்றுமையை மறக்க, எந்த வேற்றுமையும் வெறுத்து நோக்கா

மாற்றுணர்வே வழியென்

றோதி

வலம்வருவாய் உலகப் பாவாய்!

பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு

நிறுவனர்

உலகத் திருக்குறள் மையம்

Leave a Reply

Your email address will not be published.