நீச பங்க ராஜ யோகம்
ஒரு இடத்தில் அடி வாங்கினாலும் மற்றொரு இடத்தில் புகழ் பெறுவதுதான் நீசபங்க ராஜயோகம்.
உங்களுடைய ஜாதகத்திலே நன்மை தரத்தக்க கிரகங்கள் வலிமையாக இருந்தும், தீமை செய்யக் கூடிய பகை கிரகங்கள் வலுவற்றும் இருந்தால் நீங்கள் இந்த உலகில் எல்லாச் செல்வங்களையும் பெற்று மிகவும் அதிர்ஷ்டசாலியாக வாழ்வீர்கள் என்பது ஜோதிட விதிகளில் ஒன்றாகும்.
ஒரு கிரகம் வலிமையுடன் இருக்கிறதா அல்லது வலு இழந்துபோய் இருக்கின்றதா என்பதை உச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, நட்பு, சமம், பகை, நீசம் என்பவற்றை பொருத்தது.
நாம் மதிப்பெண் தந்தால் நீச நிலைக்கு 0, பகைக்குப் 10 மதிப்பெண்களும், சமநிலைக்கு 20ம்,
நட்புக்கு 40, ஆட்சிக்கு 60, மூலத்திரிகோணம் 80, உச்சம் 100 எனத் தோராயமாகக் கொள்ளலாம்.
இதன்படி பார்த்தால்
ஒரு கிரகம் தனது வலிமையனைத்தையும் இழந்து
0 மதிப்பெண் பெறும் நிலையை கிரகம் நீசம் எனலாம்.
இந்த மாதிரி நீச நிலையில் இருக்கின்ற கிரகம் தன்னுடைய காரகத்துவப் பலன்களையும், ஆதிபத்தியப் பலன்களையும் தரமுடியாது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.
ஒரு கிரகம் நீசம்மடைந்தால் அந்தக்கிரகம் சம்பந்தபட்ட எந்த ஒரு விஷயமும் முழுமையாக நமக்கு கிடைக்காது. அந்தக் கிரகத்தால் ஜாதகருக்கு எவ்விதமான பயனும் இருக்காது. விதி என்ற ஒன்று இருப்பது போல விலக்கு என்ற ஒன்றும் இருக்கிறது. இதன்படி, ஒரு கிரகம் நீசபங்கம் பெறும் பொழுது இழந்த தன் வலுவைப் பெறுகிறது.
ஒரு கிரகம் சரியான நீசபங்கத்தைப் பெறுமானால் அது உச்சத்தை விட அதிகமான வலிமையை அடையும். இது மதிப்பெண் நிலையில் 100க்கு 100 என்பதையும் தாண்டி 120 என்கிற ஒரு வினோதமான நிலையைப் பெறும். நீசபங்கம் பெறும் கிரகம் ஆரம்பத்தில் நீசத்தைத் தந்து அதன் பிறகு மிகுந்த வளர்ச்சியைத் தரும். முதலில் ஒன்றுமில்லாத நிலையை உருவாக்கி பின்பு ஜாதகரை உச்சத்திற்குக் கொண்டு செல்லும். நீசக் கிரகம் எந்த ஆதிபத்தியத்திற்கு உரியதோ அதுவும் முதலில் ஒன்றுமில்லாமல் இருந்து அப்புறம்தான் மிகுந்த வளர்ச்சி பெறும்.
Astro Selvaraj Trichy
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்