ஸ்டாலின்- திமுகவின் அடுத்தகட்ட பிரசாரம் தொடங்கியது.

திருவண்ணாமலை:

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. தேர்தலை சந்திக்க தி.மு.க. பல்வேறு பிரசார வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஒன்றிணைவோம் வா,  விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், மக்கள் கிராமசபை கூட்டம் ஆகிய தலைப்புகளில் பிரசார மேற்கொள்ளப்பட்டது.

அடுத்தகட்டமாக புதிய கோணத்தில்  “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முதல் பிரசாரம் மேற்கொள்கிறார். பிரச்சனைகளுக்கு 100 நாட்களில் தீர்வு என்ற வாக்குறுதியுடன் இந்த பிரசாரத்தை அவர் தொடங்க உள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசார திட்டத்தை இன்று திருவண்ணாமலை தொகுதியில் தொடங்கினார். இன்று காலையில் திருவண்ணாமலை தொகுதி மக்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பிற்பகல் ஆரணி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இந்த பிரசார திட்டத்தின் வாயிலாக, அடுத்த 30 நாட்களில் 3 தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் கூட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ளார்.

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற ஒவ்வொரு கூட்டத்திலும், அந்த தொகுதியைச் சேர்ந்த எந்த கிராமம் அல்லது வார்டினைச் சேர்ந்த யாரும் பங்கேற்று தங்கள் பிரச்சினைகளை கழகத் தலைவரிடம் நேரடியாகப் பதிவுசெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published.