அரவக்குறிச்சி அருகே மரத்தின் மீது கார் மோதிய
அரவக்குறிச்சி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ணகுமார் (40), மகள் வருணா (10), மாமியார் இந்திராணி (67) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த சுதர்சன் (15), மோகனா (40) ஆகியோர் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.