ரூ.5 லட்சம் வைர நெக்லஸ்

குப்பையில் ரூ.5 லட்சம் வைர நெக்லஸ்: கண்டெடுத்து கொடுத்த துாய்மை பணியாளர்

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி, 35; துாய்மை பணியாளர்.

இவர், கோடம்பாக்கம் மண்டலம் 137வது வார்டில், வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் இயக்கி வருகிறார்.

கே.கே.நகர், ராஜமன்னார் சாலையில் உள்ள வீடுகளில் குப்பை சேகரித்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்குள்ள ‘வின்ட்சர் பார்க்’ அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இசையமைப்பாளர் ஆர்.தேவராஜ், 60, என்பவர், ‘என் வீட்டில் உள்ள 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ், குப்பை போடும்போது அதில் விழுந்ததாக நினைக்கிறோம்.

தேடி எடுத்து தர முடியுமா…’ என, அந்தோணிசாமியிடம் உதவி கேட்டுள்ளார்.

தேவராஜன், 2016ம் ஆண்டு வெளி வந்த ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளர்.

சேகரிக்கப்பட்ட 500 கிலோ குப்பையை பொது இடத்தில் கொட்டி கிளறினால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால், ‘உர்பசர் சுமித்’ அதிகாரிகளிடம், அந்தோணிசாமி தகவல் தெரிவித்தார்.

பின், வார்டு மேற்பார்வையாளர் அஜய், பிரிவு அலுவலர் ஜோசப் முன்னிலையில், சாலையோரம் உள்ள காலி இடத்தில் குப்பை கழிவுகளை கொட்டினார்.

ஒரு மணி நேர தேடுதலுக்கு பின், மலர் மாலையில் சிக்கி இருந்த வைர நெக்லஸ் கண்டெடுக்கப்பட்டு, தேவராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

நெக்லஸ் தேடி கண்டெடுத்து கொடுத்த பணியாளர்களுக்கு, தேவராஜ் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.