இந்தியாவிற்கு இந்த விமானங்களை வழங்கலாம்? ஜோபிடன் அரசு அதிரடி?
அமெரிக்காவின் புதிய அரசு, போயிங் எஃப்-15இஎக்ஸ் ஃபைட்டர் ஜெட் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனைக்கு செய்ய அனுமதி சான்று வழங்கியுள்ளது.
புதிதாக ஆட்சியை அமைத்திருக்கும் ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க அரசு எதிர்காலத்தில் இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவில் இருக்கும் என்பது இப்போதே மிக தெளிவாக தெரிய வருகின்றது. அண்மையில், இந்தியா பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்குடன் அமெரிக்க பாதுகாப்புதுறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், வாஷிங்டனில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த பென்டகன் பத்திரிக்கை செயலாளர் ஜான் கிர்பி, அமெரிக்கா, இந்தியா உடன் வலுவான உறவுடன் இருக்கப்போவதை உறுதி செய்தார்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.