ஆடி முதல் வெள்ளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் பெண்கள் விரதமிருந்து வழிபாடு செய்தனர். கோயில்களில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபாடு செய்தனர்.
ஆடி முதல் வெள்ளி என்பதால் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
✅தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு வளையல் பாவாடை அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை வழிபட்டனர். கோவில் வளாகத்தில் கூழ் பிரசாதமாக வழங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் களில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி சிறப்பு பூஜை நடந்தது. சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்