42 சவரன் நகைகளை பறிமுதல்
ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 235 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் ஒரு கொள்ளையன் கைது செய்யப்பட்டார். ஆம்பூரை சேர்ந்த கார் ஓட்டுனர் குமரனை கைது செய்து, அவரிடம் இருந்து 42 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள நரசிம்மரெட்டி மற்றும் விஷ்ணு ஆகியோரை போலீஸ் தேடி வருகிறது