புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோயில்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் சுயம்புவாக எழுந்தருளிய புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோயில் ஆடி மாத முதல் நாள் என்பதால், அதிகாலையில் இருந்து பக்தர்கள் திரண்டு அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், ஜவ்வாது, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்தும் தீபாராதனை காண்பித்தும் வழிபட்டனர். கோயில் வளாகத்தில் உள்ள புற்றுப்கோயிலில் பால் ஊற்றியும், சக்தி மண்டபம் எதிரில் நெய் தீபம் ஏற்றியும், கற்பூரம் ஏற்றியும் அம்மனை தரிசனம் செய்தனர்.