செங்கோட்டை – தாம்பரம் – செங்கோட்டை ரயில்கள் பகுதியாக ரத்து
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் இன்டர்லாக் சிக்னல் பணிகள் காரணமாக
தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை, கல்லிடை, சேரன்மகாதேவி, நெல்லை வழியாக இயக்கப்படும் வண்டி எண் 20683 / 20684 தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம் அதிவிரைவு ரயில் வருகின்ற 23.07.2024 முதல் 11.08.2024 வரை விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும்.
பல ரயில்கள் தாமதமாக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 23.07.2024 முதல் 17.08.2024 சென்னைக்கு ரயில் பயணம் மேற்கொள்பவர் முன்கூட்டியே தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்