காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு இளைஞர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த செல்போன் மூலம் ப்ளூடூத் ஸ்பீக்கரில் பாடலை ஒலிக்கச் செய்து பொதுமக்களுக்கு இடையூறாக பிரேக் டான்ஸ் ஆடினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த காளிதாஸ் என்ற இளைஞர் காரியாபட்டியில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தவர் என தெரியவந்தது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பிரேக் டான்ஸ் ஆடிய இளைஞர் மன்னிப்பு கோரியதால காரியாபட்டி காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.