வெயிட்டிங் லிஸ்ட் உள்ளவர்கள் இனி முன்பதிவு
நவம்பர் 14 2024 முதல் 16339/ 16351 மும்பை நாகர்கோவில் மும்பை எக்ஸ்பிரஸில் 2 / 3 ஏசி பெட்டிகள் குறைக்க பட்டு 2 கூடுதல் சாதாரண பொது பெட்டிகள் இணைக்க பட்டு இயக்க பட உள்ளது. இனி 5 க்கு பதில் மூன்று 3 ஏசி பெட்டிகளும் , 2 க்கு பதில் 4 சாதாரண பெட்டிகள் இணைக்க பட்டு இயக்க படும். மொத்தம் 22 பெட்டிகள்.
இடைப்பட்ட ஸ்டேஷன்களில் பலர் முன் பதிவு பெட்களில் ஏறுவதை தடுக்கவும் முன் பதிவு இல்லாத வெயிட்டிங் லிஸ்ட் உள்ளவர்கள் இனி முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய முடியாது. டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை என்றால் இரத்து செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் அல்லது சாதாரண பெட்டியில் பயணம் செய்யலாம். 4 சாதாரண பெட்டிகளில் 325 பேர் ஒரு நாளைக்கு பயணம் செய்யலாம். பெண்கள் ஊனமுற்றவர்கள் பெட்டியும் தனியாக உள்ளது.