நேபாளத்தில் ஆற்று வெள்ளத்தில் 2 பேருந்துகள்
நேபாளத்தில் ஆற்று வெள்ளத்தில் 2 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதில் இந்தியர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய நேபாளத்தில் மடன் அஸ்ரித் நெடுஞ்சாலையில் பேருந்துகள் சென்று கொண்டிருந்தபோது மண்சரிவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகளில் ஓட்டுனர்கள் உள்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்திருந்தனர்.