பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள்
ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த தினமான நாளை பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் முன்பதிவு டோக்கன் வழங்குமாறு பொதுமக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படும். 2 சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்குப் பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் கூடுதலாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது