நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் – 16
நம்ம நாட்டு மருந்து…! (16)
அஞ்சறைப்பெட்டியில கடுகுக்கு அடுத்தபடியாக இருப்பது சீரகம்…!
உணவை சுவையாக்கவும் செரிக்கவும் செய்ய வல்ல சிறப்பான ஒரு மூலிகை..!
சீரகம்=சீர்+அகம்..!
அகத்தைச் சீர்செய்யும் சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும்.
நோய் எதிர்ப்பு ஆற்றலை தரக்கூடிய, நமது தமிழக உணகளின் ரெசிபிக்களில் ஒன்றானது “ரசம்”
இந்த ரகத்தில் பல கூட்டு மூலிகை பொருள்கள் இருந்தாலும் சீரகம் தான் ரசத்தின் தளபதி என்றால் மிகையாகாது.
சீரகம் இல்லாத ரசம் ரசமே அல்ல என்பதாகும்..!
சீரகத்திலிருந்து எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
இதில் வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப்பொருமல் போய்விடும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது.
செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.
சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றி உடலின் புறத்தையும், அகத்தையும், செம்மைப்படுத்தும் சீரகத்தை நோய் வருமுன் காக்க நன்கு பயன்படுத்திக் கொள்ளவது சிறப்பாகும்…!
நல்ல (உணவு) மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து…!
தொகுப்பு:- சங்கரமூர்த்தி.. 7373141119
[12:02 PM, 1/11/2021] நாட்டு மருந்து: நல்ல மருந்து…!