கலைஞர் ‘கருணாநிதி’ பெயரில் ₹100 நாணயம் வெளியிட அனுமதி
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் நினைவு நாணயம் ஒன்றை வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது.
இதற்காக, ₹100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.