பிரித்தானிய பாராளுமன்றத்தில் முதல் ஈழத்தமிழ் பெண் “உமா குமரன்”…
பிரித்தானிய பாராளுமன்றத்தில் முதல் ஈழத்தமிழ் பெண் “உமா குமரன்”….!
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் உமா குமரன். இலங்கை வம்சாவளி தமிழரான இவர் லேபர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அந்த கட்சி பிரிட்டனில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது.
அவர் போட்டியிட்ட தொகுதியில் மொத்தம் 54.18 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். அதில் 19,415 வாக்குகளை உமா குமரன் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.கிழக்கு லண்டனில் பிறந்து, வளர்ந்தவர் உமா. உமா குமரனின் பெற்றோர் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். கடந்த 1980-களில் உள்நாட்டு போரின் போது பிரிட்டன் நாட்டில் அவர்கள் குடியேறி உள்ளனர். அங்குள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார் உமா. தற்போது ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவில் வசித்து வருகிறார்.அவரது குடும்பம் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டனில் வசித்து வருகிறது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான உமா குமரனுக்கு அகிலம்
முழுதும் வாழ்த்துகள் குவிந்த வணணம் உள்ளன.
உமா குமரனுக்கு நாமும் எமது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்…!
எஸ்ஜிஎஸ் கம்பளை.