மணிப்பூரில் பற்றி எரியும் நெருப்பில் எதிர்க்கட்சிகள்
மணிப்பூரில் பற்றி எரியும் நெருப்பில் எதிர்க்கட்சிகள் எண்ணெய் ஊற்றுகின்றன, என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில், ஜனாதிபதி உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசியதாவது:
மணிப்பூர் மாநில சூழ்நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கலவரம் தொடர்பாக 11 ஆயிரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன்,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாநிலத்தில் கலவரம் தொடர்ந்து குறைந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மற்ற நிறுவனங்கள் செயல்படுகின்றன. அமைதியை கொண்டு வர சம்பந்தப்பட்டவர்களுடன் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
மணிப்பூரில் மத்திய உள்துறை அமைச்சர் பல வாரம் தங்கி இருந்தார். வெள்ள சூழ்நிலையை சமாளிக்க அம்மாநில அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கியது. இன்று தேசிய பேரிடர் மீட்பு படையின் இரண்டு குழுக்கள் மணிப்பூர் சென்றுள்ளன. மணிப்பூரில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுபவர்களை மக்கள் நிராகரிப்பார்கள் என எச்சரிக்கிறேன்.
மாநிலத்தில் 10 முறை ஜனாதிபதி ஆட்சியை காங்கிரஸ் அமல்படுத்தியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.