உலகப் பாவை – தொடர் – 25

26. என்றைக்கோ

                  சாயும் காலம்?

இனம்ஒருநீர் ஓடை என்றால்  எழுகடல்நீர் மனிதம் ஆகும்;

இனவோடை கடலுள் சேர்ந்தால் இனங்காண இனங்கள் எது?

இனமென்னும் இறந்த காலம் இல்லையெனும் எதிருங் காலம் இனம்பகுப்பால் உதிரும் காலம்; என்றைக்கோ சாயுங் காலம்?

வனவிலங்கும் கூடி வாழும்

வாழவழி காட்டி விட்டால்

இனவிலங்கு மனிதன் மட்டும் ஏனிதனை மறந்து விட்டான்?

மனமதனைத் திறந்து

பார்த்தால்

மனிதஇனம் ஒன்றாய்த் தோன்றும்

எனச்சொல்லி உலகைக் காக்க எழுந்துலவாய் உலகப் பாவாய்!

பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு

நிறுவனர்

உலகத் திருக்குறள் மையம்

திருக்குறள்: உலகத் திருக்குறள் மையம், சென்னை

Leave a Reply

Your email address will not be published.