மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவில் ஜூலை 5,6,7-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது