படிக்கட்டில் பயணம் செய்யும் கண்டக்டர்
சாயர்புரம் அருகே பேருந்தில் இடம் இல்லாததால் படிக்கட்டில் பயணம் செய்யும் கண்டக்டர்!
தூத்துக்குடியில் இருந்து சாயர்புரம், நாலுமாவடி வழியாக நாசரேத் வரை காலையில் தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் பல பள்ளிகள் உள்ளதால் பேருந்தில் தினமும் அளவுக்கு அதிகமான பயணிகளின் கூட்டம் உள்ளது. மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் கண்டக்டர் பேருந்தில் பின்னால் உள்ள கம்பியை பிடித்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் பேருந்தில் இடமில்லாமலே படிக்கட்டில் தொத்தி செல்கின்றனர் என்பதற்கு கண்டக்டர் பயணமே சாட்சியாக உள்ளது. இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் அதிகமான மாணவர்கள் வரும் பகுதிகளுக்கு பள்ளி நிர்வாகம் வேன் வசதி செய்து தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை