கேதார்நாத் கோவிலுக்கு அருகே பனிச்சரிவு
உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் தரிசனம் நடந்து வருகிறது
அப்போது முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு அருகே காந்தி சரோவர் மலையில் பனிச்சரிவு ஏற்பட்டது.
இதனால் எவ்வித உயிரிழப்பு, பொருட்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த பனிச்சரிவு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.