குஜராத்தில் பாஜக தோற்கடிக்கப்படும்
குஜராத்தில் பாஜக தோற்கடிக்கப்படும் என மக்களவையில் எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது;
“எழுதி வைத்துக் கொள்ளுங்கள், குஜராத்தில் பாஜக தோற்கடிக்கப்படும். குஜராத்தில் பாஜக தோற்கடிக்கப்படுவது நிச்சயம்.
நீட் தேர்வின் மூலம் தொழிற்கல்வியை வியாபாரக் கல்வியாக்கிவிட்டனர். நீட் நுழைவுத் தேர்வு பணம் படைத்தவர்களுக்கான தேர்வாக அமைந்துவிட்டது. குடியரசுத் தலைவர் உரையில் நீட் குறித்து எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை” என கூறியுள்ளார்