நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு
கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு
கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. நடப்பு ஆண்டு மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அப்போது நடந்த விசாரணையில் 1563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. மேலும் அவர்களுக்கு ஜூன் 23ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் அதில் பங்கேற்காதவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதற்கு முன்பு அவர்கள் பெற்று இருந்த மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தது.