அந்தமானில் துணைநிலை ஆளுநர் மின்சார பேருந்துகளை தொடங்கி வைத்தார்?
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் அட்மிரல்(ஓய்வு) டி.கே.ஜோஷி, மின்சார பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான என்டிபிசியின் துணை நிறுவனமான என்டிபிசி வித்யுத் வியாபார் நிகாம் லிமிடெட்(என்விவிஎன்) செயல்படுத்துகிறது.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில், மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அங்கு காற்று மாசுவை குறைத்து, சொகுசான பொது போக்குவரத்துக்கு உதவும்.
மேலும், பெங்களூரு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 90 மின்சார பேருந்துகளை வழங்கும் ஒப்பந்தத்தையும் என்விவிஎன் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்