தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டி
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகேஸ்வர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ₹10 லட்சம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தியது உறுதுணையாக இருந்தது என கார்த்திகேஸ்வர் நெகிழ்ச்சி பேட்டி.
தங்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய கார்த்திகேஸ்வருக்கு வாத்தியங்கள் முழங்க, வழிநெடுக பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட பின் பாராட்டு விழா நடைபெற்றது.
அவருக்கு தஞ்சை மாவட்ட ஆணழகன் சங்கத்தினர், உடற்பயிற்சி நிலைய உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பட்டுக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் சால்வை அணிவித்து பாராட்டி கௌரவப்படுத்தினர்.