நிர்பந்தத்தால் ‘நீட்’ தேர்வு விலக்கப்படும்: திருச்சி சிவா
நாடு முழுவதும் எழும் எதிர்ப்பு காரணமாக, ‘நீட்’ தேர்வு நிச்சயம் விலக்கப்படும் என்று, மாநிலங்களவை திமுக குழுத்தலைவர் திருச்சி சிவா நம்பிக்கை தெரிவித்தார்.
அவசர நிலை குறித்து பேசும் பாஜக, பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை ஏன் மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரவில்லை? என வினவினார்.
பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை நீடிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.