தமிழ்நாட்டில் சுமார் 2000 ஆம்னி பேருந்துகள் உள்ள நிலையில் 547 பேருந்துகள் இயக்கப்படாது என்று உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
547 பேருந்துகள் இயக்கப்படாது என்பதால் அதில் முன்பதிவு செய்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இன்று முதல் தமிழ்நாட்டில் இயங்காது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
